தடை செய்யப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கார் பந்தயம் நடத்திய பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு
கேரளாவில் தடை செய்யப்பட்ட இடத்தில் உரிய அனுமதியில்லாமல் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் கார் பந்தயம் நடத்திய வீடியோ வைரலான நிலையில், அவர் மீது அம்மாநில போக்குவரத்துத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். வாகமண் பகுதியிலுள்ள எஸ்டேட் ஒன்றில், தனது விலையுயர்ந்த ஜீப் ரேங்லர் காரில் ஜோஜு ஜார்ஜ் ஆஃப் ரோடு பந்தயத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
பந்தயம் நடந்த பகுதி விவசாயம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள பகுதி என்றும் அங்கு உரிய அனுமதி இன்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது கேரள போக்குவரத்துத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Comments