ஸ்பேனர் வடிவில் கடத்தி வரப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

0 6007

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஸ்பேனர் வடிவில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 ரியாத்தில் இருந்து சென்னை வந்த மகபூப் பாஷா என்பவரை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது பைக்குள், வெள்ளி முலாம் பூசப்பட்ட 6 தங்க ஸ்பேனர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு நாற்பத்தியேழரை லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments