ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தது ஆந்திர போலீஸ்..!

0 2540

ஆந்திராவில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்த போலீசார், 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பதியில் இருந்து சித்தூர் வழியாக பெங்களூருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், குடிபாலா சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த 3 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments