முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற லாரி.. எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்து.. தீப்பிடித்து எரிந்த காட்சிகள்!

0 2567

திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற சரக்கு லாரி, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில், இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஈரோடு - பழனி நெடுஞ்சாலையில் சென்றது.

அப்போது, தேங்காய் நார் லோடு ஏற்றிக் கொண்டு எதிர் திசையில் வந்த லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்று செண்டர் லேனை தாண்டி மறுமார்க்கத்திற்கு வந்து கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் டீசல் டேங்கர் வெடித்து இரு லாரிகளும் தீப்பிடித்த நிலையில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.

தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் இருந்த கிளீனர் கீழே குதித்து தப்பிய நிலையில், ஓட்டுநர் உடலில் தீப்பற்றியது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்த ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தின் காட்சிகள் மற்றொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments