கணவன் இறந்த சோகத்தில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

தஞ்சாவூர் மாவட்டத்தில், கணவன் இறந்த சோகத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து பூதலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயக்குமார், உடலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி சத்யா, தனது 5 மற்றும் 7 வயது மகன்களுக்கு பூச்சி கொல்லி மருந்தை, டானிக்கில் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவமனையில்அனுமதித்த நிலையில், சிறுவர்கள் முகேஷ், நிகிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய் சத்யா தொடர் சிகிச்சையில் உள்ளார்.
Comments