கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளிப்பு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. கணவன்,மனைவி கைது..!

0 3462
கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளிப்பு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. கணவன்,மனைவி கைது..!

சென்னையில் கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளித்த விவகாரத்தில், தம்பதி கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பைச் சேர்ந்த சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

பணத்தைத் திருப்பி செலுத்தாததால் வட்டி அதிகமாகி 30 லட்சமாக உயர்ந்துவிட்டதாகவும், வீட்டை எழுதி தருமாறும் ரங்கநாயகி உள்ளிட்ட 2பேர் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சித்ரா மண்ணெணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரங்கநாயகி, அவரது கணவர், மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து வீட்டை எழுதி தரும்படி மிரட்டியதாக சித்ரா வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments