நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை.. முதல்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் தொடக்கம்..!

0 1903
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை.. முதல்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் தொடக்கம்..!

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 'வை-பை' சேவைகளை எளிமைப்படுத்த 'பிரதமர்-வானி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 ரெயில் நிலையங்களில் பொது வைபை சேவைகளை பயன்படுத்த இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சயில் ரயில்டெல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான புனீத் சாவ்லா கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், , வருகிற ஜூன் மாதத்துக்குள், தற்போது வைபை வசதி உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 102 ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

இத்திட்டத்தை பயன்படுத்த ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று,Wi-DOT' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments