நிதி திரட்டுவதற்காக 165 நாடுகளில், 1.60 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம்.!

0 1995

தண்டுவட சிகிச்சை தொடர்பான ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்காக 165 நாடுகளில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு லட்சத்து 60,000 பேர் பங்கேற்றனர்.

Wings for Life என்ற தொண்டு நிறுவனம், 9 ஆண்டுகளாக மே மாத முதல் ஞாயிற்றுகிழமை, இந்த ஓட்டப்பந்தயத்தை நடத்தி வருகிறது. பந்தயத்தின் 30ஆவது நிமிடத்தில், போட்டி தொடங்கிய இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் வேகத்தில் புறப்பட்டு செல்லும் கார், போட்டியாளர்களை கடந்ததும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

56 கிலோமீட்டர் ஓடிய ரஷ்ய பெண்மணி நினா ஜரினா பெண்கள் பிரிவிலும், 64.5 கிலோமீட்டர் ஓடிய ஜப்பானின் ஜோ ஃபுகுடா ஆடவர் பிரிவிலும் முதலிடத்தை பிடித்தனர்.

அதிகப்பட்சமாக இந்தியாவின் ஜெய்ப்பூரில் 42 டிகிரி வெயிலிலும், குறைந்தபட்சமாக கிரீன்லாந்தில் மைனஸ் 8 டிகிரி குளிரிலும் இந்த போட்டி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments