அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமையாசிரியர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை.!

0 1948

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமையாசிரியர் வீட்டில் இருந்த 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நல்லகவுண்டன்பாளையம்,  மலர் நகரில் வசித்து வரும் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமையாசிரியரான இசபெல்லா ஜான்சி ராணி, தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களில் இருந்த 65 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments