கூண்டில் இருந்து தப்பி வனக் காவலர்கள் உள்ளிட்டோரை கொடூரமாக தாக்கிய சிறுத்தை... வெளியான வீடியோ காட்சி!

0 2531

அரியானாவில் கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை வனக் காவலர்கள் உள்ளிட்டோரை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியான நிலையில் சிறுத்தை பிடிபட்டது.

பனிபட் மாவட்டம் பெஹராம்பூர் கிராமத்தில் புகுந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில் அதை இடமாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

திடீரென கூண்டை விட்டு வெளியேறிய சிறுத்தை காவலர்கள் கொடூரமாக தாக்கி தப்ப முயன்றது.

படுகாயமடைந்த 3 அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தப்ப முயன்ற சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். சம்பவம் தொடர்பாக பனிபட் மாவட்ட எஸ்.பி. வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments