90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்கியதில் 60 பேர் உயிரிழப்பு - உக்ரைன் அதிபர்

0 2162

உக்ரைனின் லுஹான்ஸ்க் நகரம் அருகே சுமார் 90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்பட்ட நிலையில், அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய அவர், பிலோஹோரிவ்கா கிராமத்தில் ரஷ்யப் படையினர் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் தஞ்சமடைந்த கட்டடம் தீப்பிடித்து இடிந்து விழுந்ததாக கூறினார். இந்த சம்பவத்தில், சுமார் 60 அப்பாவி பொதுமக்கள் வரை உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும், இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments