நவ்நீத் ராணா, ரவிந்திர ராணா அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம்.. இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்ய மராட்டிய அரசு மேல் முறையீடு..!

0 5692
நவ்நீத் ராணா, ரவிந்திர ராணா அமித் ஷாவை சந்திக்க டெல்லி பயணம்.. இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்ய மராட்டிய அரசு மேல் முறையீடு..!

நவ்நீத் ராணா மற்றும் ரவிந்திர ராணா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மகாராஷ்ட்ர அரசு திட்டமிட்டுள்ளது.

நடிகையும், அமராவதி தொகுதி எம்பியான நவ்நீத்தும் மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவிந்திரராணாவும் பாந்த்ராவில் முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமான் சாலீசா பாட முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர்.

பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும் 12 நாட்களுக்குப் பின்னர் ஊடகத்திடம் பேசக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்தது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நவ்நீத் ராணாவும் ரவிந்திர ராணாவும் திட்டமிட்டுள்ளனர். இருவருக்கும் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மகாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments