மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு... இண்டிகோ ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

0 4383

ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு இண்டிகோ ஊழியர்களுடன் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அசவுகரிய கார் பயணம் மற்றும் பசி, தாகம் உள்ளிட்ட பிரச்சினைகளால் சிறுவன் அழுது கொண்டு இருந்ததாகவும், அசாதாரண சூழலில் சிறுவன் இருப்பதால் விமானத்தில் பயணிக்க இண்டிகோ ஊழியர்கள் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுவனை அனுமதிக்கக் கோரி பெற்றோரும், சக பயணிகளும் கேட்ட போதும் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சக பயணி தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ  வேகமாக பரவியது. அதேநேரம் அசாதாரண மனநிலையில் சிறுவன் இருந்ததால், மற்ற பயணிகளுக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்பதால்  அனுமதி மறுத்ததாக இண்டிகோ தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments