பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

0 1983

ருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆதீனகர்த்தர்கள், பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதீனகர்த்தர்கள், பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாகவும் விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் கூறினர்.

இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments