போலீஸ் எஸ்.பியிடம் புகார்.. மளிகைக் கடை சூறை.. பெண் மீது தாக்குதல்.. போதை ரவுடிகள் அட்டகாசம்..!

0 2076

சிவகங்கையில் கடை முன் அமர்ந்து மது அருந்தும்  நபர்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தவரின் மளிகைக் கடையை 3 ரவுடிகள் இரும்பு கம்பிகளால் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் ரகுநாதன் என்பவர் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகின்றனர்.

கடையில் இவருக்கு துணையாக இவரது மனைவி அமுதா இருப்பது வழக்கம், இவரது கடை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடம் அருகே தினமும் 10-க்கும் மேற்பட்டோர் மது அருந்தி வந்துள்ளனர் இதனை அறிந்த கடையின் உரிமையாளர் ரகுநாதன் சிவகங்கை எஸ்பியிடம் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

சம்பவத்தன்று கடையில் அவரது மனைவி இருந்த போது இரு சக்கர வாகனத்தில் இரும்பு கம்பிகளுடன் வந்திறங்கிய 3 பேர் கும்பல்
ரகுநாதனின் மளிகை கடையை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

டீக்கடையை முற்றிலும் அடித்து சூறையாடிய கும்பல், அவரது மனைவியின் மீதும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் காட்சியில் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. மளிகைகடை உரிமையாளர் ரகுநாதன், மாவட்ட எஸ்.பியிடம் அளித்த புகார் குறித்து  சம்பந்தப்பட்ட போதை ரவுடிகளிடம் உள்ளூர் போலீசில் யாரோ ஒருவர் போட்டுக் கொடுத்ததால், ரகு நாதனின் கடையை ரவுடிகள் சூறையாடியதாக கூறப்படுகின்றது.

ரவுடிகள் மீதும் காட்டிக் கொடுத்த மாமூல் போலீசார் மீது. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments