தேசிய நெடுஞ்சாலையில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி!

0 1223

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஜெகன், ஜெகதீஷ், மகேஷ் ஆகிய 3 பேர் விதிகளை மீறி ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மண்டபத்தில் இருந்து மரைக்காயர்பட்டிணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், இவர்களது பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், பைக்கில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனிடையே, பைக் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், காரை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments