வைணவத் திருத்தலமான பத்ரிநாத் கோவில் திறப்பு...இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

0 1002

உத்தரகாண்ட் மாநிலத்தின் வைணவத் திருத்தலமான பத்ரிநாத் கோவிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்காகத் திறந்து விடப்பட்டன.

பனிக்காலங்களில் பல மாதங்கள் மூடப்பட்டு கோடைக் காலத்தை முன்னிட்டு கோவில் திறக்கப்படுவதால் வளாகம் மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமாலின் வழிபாட்டுத் தலம் தான் பத்ரிநாத்.

அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

சைவத் திருத்தலமான கேதார்நாத் கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்தரி, யமுனோத்தரி ஆகிய நான்கு புண்ணியத் திருத்தலங்களின் சார் தாம் யாத்ரா கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது.

பக்தர்கள் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments