குடியரசுத் தலைவர் தேர்தல்: கூட்டணிக் கட்சியினருடன் பாஜக முக்கிய ஆலோசனை.!

0 1879

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜக தனது கூட்டணிக் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ,குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூலை மாதம் இறுதியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தனது ஆதரவு கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments