டெல்லியில் இரவு நேரத்தில் கார் மீது துப்பாக்கியால் சுட்ட 3 பேர்.. 2 பேர் படுகாயம்.. சுட்டவர்கள் பைக்கில் தப்பி ஓட்டம்..!

டெல்லியில் இரவு நேரத்தில் கார் மீது துப்பாக்கியால் சுட்ட 3 பேர்.. 2 பேர் படுகாயம்.. சுட்டவர்கள் பைக்கில் தப்பி ஓட்டம்..!
டெல்லி சுபாஷ்நகர் பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு வெள்ளை நிற காரை நோக்கி மூன்று பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
காரில் வந்தவர்களை பத்து ரவுண்டுகள் சுட்டுக் கொல்ல முயற்சித்த மூன்று பேரும் பைக்கில் தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இரண்டு பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Comments