சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிவர்த்தனையில் ரூ.150 கோடி ஊழல் -அமலாக்கத்துறையினர் சோதனை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிவர்த்தனையில் 150 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் சுமன் குமார் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 17 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றினர்.
இதையடுத்து சுமன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஜார்க்கண்ட் சுரங்க வளர்ச்சித்துறை செயலர் பூஜா சிங்கால் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக சுரங்கத்துறையை தமது வசம் வைத்துள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.
Comments