தஜிந்தர் சிங் பாகாவை கைது செய்ய இடைக்காலத் தடை.. பஞ்சாப் போலீசாரின் 2 வது கைது வாரண்ட்டை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..!

0 1383
தஜிந்தர் சிங் பாகாவை கைது செய்ய இடைக்காலத் தடை.. பஞ்சாப் போலீசாரின் 2 வது கைது வாரண்ட்டை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..!

பாஜகவின் டெல்லி செய்தித் தொடர்பாளர் தஜிந்தர்சிங் பாகாவை மே 10 ஆம் தேதி வரை கைது செய்ய பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில் புதிதாக பிறப்பிக்கப்பட்ட கைது பிடி வாரண்ட் நிறுத்தி வைக்கப்பட்டது. தஜிந்தர் சிங் பாகா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்ததற்காக பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரியானா மற்றும் டெல்லி போலீசார் அவரை மீட்டனர்.

இந்நிலையில் புதிதாக கைது வாரண்ட் ஒன்றை மொஹலி நீதிமன்றம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து பாகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர விசாரணைக்கு ஏற்கப்பட்டு இரவில் விசாரணை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments