காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி ரூ.6.90 லட்சம் கொள்ளை.. கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் கைது..!

0 1144
காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி ரூ.6.90 லட்சம் கொள்ளை.. கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் கைது..!

மேட்டுப்பாளையம் அருகே காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி காரில் இருந்த 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் காரில் சென்றபோது, இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரது கார் பஞ்சராகிவிட்டதாகக் கூறி கவனத்தைத் திசை திருப்பியுள்ளார். அப்போது கூட்டாளிகள் 3 பேர் காரில் இருந்த பணத்தை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எட்வின் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், ஓசூரில் பதுங்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த 14 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments