தடைகளை தாண்டி துணைவிகளுடன் ஓட்டம்...ஹங்கேரியில் வெகு விமரிசையாக நடைபெற்ற போட்டி.!

0 918

ஹங்கேரியில் நடந்த தம்பதிகளுக்கான தடைதாண்டும் போட்டியில் தங்கள் இணைகளை தோளில் தூக்கிக் கொண்டு கணவன்மார்கள் வலம் வந்தனர்.

குழு வெற்றியை ஊக்குவிக்கும் முறையிலான போட்டியில் பலவேறு பகுதிகளைச் சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர்.

260 மீட்டர் தூர பந்தயக் களத்தில் மனைவிகளை தோளில் தூக்கிய கணவர்கள் சேறு, குட்டை, மணல் மேடு, டயர்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தடைகளைத் தாண்டி இலக்கை அடைந்தனர்.

முதலிடம் இடம் பிடித்த தம்பதிக்கு பரிசுப் பொருட்களும், எடைக்கு நிகரான பியர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments