ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மலக்பேட் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வானி மருத்துவமனையின் முதல்தளத்தில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்டமானது.
தகவலின் பேரில் விரைந்த வந்த தீயணைப்பு துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Comments