சென்னையில் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய பைபர் படகுகளில் தீ.!

0 8087

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத 2 பழைய பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்து கருகின.

கடலோர காவல் படையினர் பயன்படுத்தி, பழுது ஏற்பட்டதால் ஏலத்தில் விடப்பட்ட நான்கைந்து பைபர் படகுகளை, இரும்பு கழிவுகள் சேகரிப்பதற்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு தண்டையார் பேட்டையை சேர்ந்த அம்பி என்பவர் வாங்கியிருந்தார்.

கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த படகுகளையொட்டி கிடந்த குப்பைகளில் மதியம் 3.45 மணியளவில் தீப்பிடித்து மளமளவென 2 படகுகளில் முற்றிலுமாக பரவியுள்ளது.

காவலாளி அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் வந்து, தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments