திருப்பூரில் ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவி.!

0 2266

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - சுசீலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கோபால் பணியாற்றி வந்தார்.

கடந்த 4ஆம் தேதி வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கோபால், வழியில் சந்தித்த நண்பர் ஒருவரிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, கோபாலின் கழுத்து, வயிறு, மார்பு என 13 இடங்களில் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியது.

போலீசார் விசாரணையில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த சுசீலாவுக்கு, உடன் பணியாற்றிய மாரீஸ் என்பவனுடன் தவறான தொடர்பு இருந்ததும், இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு கோபால் தடையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கூலிப்படையை ஏவி, கோபாலை அவர்கள் கொலை செய்ததும் தெரியவந்தது. மாரீஸ் உட்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சுசீலா உட்பட மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments