மும்பையில் எல்.ஐ.சி அலுவலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து.!

0 683

மும்பை சாண்டாக்ரூஸில் உள்ள எல்.ஐ.சி அலுவலகக்கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தின் 2-வது மாடியில் தீப்பிடித்து பரவி வந்த நிலையில் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பள சேமிப்பு திட்டப் பிரிவு பகுதியில் கணினிகள், மின் வயர்கள், கோப்புகள், மர வேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றில் தீ பரவியதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments