இஸ்லாமிய நெறிப்படி மிகக்கொடிய குற்றம்...ஐதராபாத் ஆணவக் கொலைக்கு கண்டனத்தை தெரிவித்த ஓவைசி!

0 4259

ஐதராபாத்தில் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்த இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காதலித்துத் திருமணம் செய்த இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வழிமறித்த பெண்ணின் அண்ணனும் அவனது ஆட்களும் இளைஞர் நாகராஜை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றனர்.

இந்தக் கொலையைக் கண்டித்துள்ள அசாதுதீன் ஓவைசி, ஒரு பெண் விரும்பி ஒருவரைத் திருமணம் செய்த நிலையில், அவள் கணவனைக் கொல்ல அவளின் அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

சட்டப்படி இது குற்றச்செயல் என்றும், இஸ்லாம் நெறிப்படி மிகக் கொடிய குற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments