ஹவானாவில் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில் எரிவாயுக் கசிவால் பயங்கர வெடிவிபத்து, 22 பேர் உயிரிழப்பு..!

0 1077

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில், எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றாண்டு பழமையான வரலாற்று சிறப்புமிக்க சரடோகா நட்சத்திர விடுதியில், நேற்று எரிவாயு கசிவின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டலின் முன்பகுதி உருக்குலைந்து போனது. இடுபாடுகளில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் அருகிலிருந்த பள்ளிக் கட்டிடமும் சேதமடைந்ததாகவும் காயமடைந்த 15 குழந்தைகளுள் ஒரு குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் ஹோட்டல் மூடப்பட்டிருந்ததாகவும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளே இருந்ததாகவும் அரசின் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments