கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி விபத்து..!

0 1760

கேரளாவில், கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மலப்புரம் அடுத்த வேங்கரை என்னும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற போது எதிர்திசையில் வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பைக் மீது மோதியது.

அதில், பைக்கில் இருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். இருவரும் மலப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக வேங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments