சிங்கிளா வசிக்கும் நடிகை… தீரா தொல்லை கொடுத்த சினிமா டைரக்டர் கைது..!

0 9025
சிங்கிளா வசிக்கும் நடிகை தீரா தொல்லை கொடுத்த சினிமா டைரக்டர் கைது..!

கணவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழும் நடிகையை  திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வாட்ஸ் அப்பில் தீரா தொல்லை கொடுத்த பிரபல சினிமா இயக்குனர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

மலையாளம் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மஞ்சுவாரியர்
பிரபல நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்

இடையில் காவ்யா மாதவனுடன் காதலில் விழுந்த திலீப்பின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மஞ்சுவாரியர் , தனது 22 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தமிழில் தனுஷ் உடன் அசுரன் படத்தில் ஜோடியாக நடித்தார் மஞ்சுவாரியர்

கணவர் திலீப்போ, மனைவிக்கு தங்கள் காதல் விவகாரத்தை போட்டுக் கொடுத்த நடிகையை கடத்தி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் சிக்கி கைதாகி, தற்போது வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சென்று வருகின்றார்

இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் , அவரை சிலர் சிறைவைத்திருப்பதாகவும் முக நூலில் பிரபல மலையாள பட இயக்குனர் சனல்குமார் சசிதரன் தனது முக நூலில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது நடிகை மஞ்சிவாரியர் , கொச்சி காவல் ஆணையர் நாகராஜுவிடம் புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக சனல் குமார் சசிதரனை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் சனல் குமார் சசிதரன் சத்தமில்லாமல் செய்த வாட்ஸ் ஆப் சேட்டை அம்பலமானது . கணவரை பிரிந்து வாழும் மஞ்சுவாரியர் மீது தீராத காதல் கொண்ட சனல் குமார், தினமும் மஞ்சுவாரியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று மஞ்சுவாரியரை சந்திக்க முயன்றுள்ளார் அவர் மறுத்ததால், அவருக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்கிற அளவுக்கு பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தான் மஞ்சிவாரியர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் மஞ்சுவாரியார் குறித்து முக நூலில் அவதூறான கருத்துக்களை சனல்குமார் பதிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இயக்குனர் சனல்குமார் சசிதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments