பண மோசடி புகாருக்குள்ளான தனது வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஐ.

0 14266
பண மோசடி புகாருக்குள்ளான தனது வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஐ.

அசாம் மாநிலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பண மோசடி செய்த செய்த வழக்கில், தனது வருங்கால கணவரை, பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள நாகோன் என்ற நகரில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜூன்மோனி என்பவருக்கும் ராணா போகாக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

ராணா தன்னை அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி எனக் கூறி ஜுன்மோனியை நம்பவைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.யில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் ராணா பண மோசடி செய்ததாக ஜூன்மோனியிடம் சிலர் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த அவர், ராணா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். வருங்கால கணவர் என பாராமல், அவரை கைது செய்த உதவி ஆய்வாளர் ஜுன்மோனிக்கு காவல் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments