மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகரின் மரணம் அரசியல் படுகொலை என அமித் ஷா குற்றச்சாட்டு!

0 1554

மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகரின் மரணம் அரசியல் கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது குறித்து அறிக்கை அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமித் ஷாவை வரவேற்கும் இருசக்கர வாகனப் பேரணிக்குத் தலைமையேற்க இருந்த பாஜக இளைஞரணியின் அர்ஜுன் சவுராசியா உடல் காசிப்பூரில் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

திரிணாமூல் காங்கிரஸ்காரர்கள் அடித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக சிபிஐ விசாரணை நடத்தக் கோரியுள்ளது. தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அமித் ஷா, அர்ஜுன் சவுராசியாவின் வீட்டுக்குச் சென்று அவர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments