வேலையை உறுதிப்படுத்தக்கோரி போர்டு தொழிற்சாலை ஊழியர்கள் 2,500 பேர் உள்ளிருப்பு போராட்டம்..!

0 2010
வேலையை உறுதிப்படுத்தக் கோரி போர்டு தொழிற்சாலை ஊழியர்கள் 2,500 பேர் உள்ளிருப்பு போராட்டம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள், தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான இழப்பு காரணமாக தொழிற்சாலையை மூட போர்டு நிறுவனம் முடிவெடுத்த நிலையில், ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் மே மாதம் வரை பணிகள் நீடிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து ஆலையில் வேலை செய்து வரும் சுமார் 2 ஆயிரத்து 500 ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்த போவதாகவும் போர்டு நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து வேலையை உறுதிப்படுத்தக் கோரி தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments