விபத்தான காரில் இருந்து மூட்டை, மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்.. இளைஞர் கைது

0 1942
விபத்தான காரில் இருந்து மூட்டை, மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்.. இளைஞர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரிலிருந்து மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோடுகுளி அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து அங்கு சென்ற தீவட்டிப்பட்டி போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்து  16மூட்டைகளில்  ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 12 மூட்டைகளில் விமல் பாக்குகள் அடங்கிய போதை பொருட்கள்  இருப்பது தெரிய வந்தது.

காரை ஓட்டி வந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்ததாகத் தெரிவித்ததை அடுத்து அவரைக் கைது செய்தனர்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments