சிதம்பரத்தில் பன்றிகளை பிடிக்க வந்த நகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பன்றி வளர்ப்பவர்கள் சரமாரியாக தாக்குதல்.!

0 3061

சிதம்பரத்தில் பன்றிகளை பிடிக்க வந்த நகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பன்றி வளர்ப்பவர்கள் சரமாரியாக தாக்கினர். சிதம்பரம் அண்ணா தெருவில் வீட்டின் வாசலில் விளையாடிய ராஜா என்பவரின் 2 வயது குழந்தையை கடந்த மாதம் 29-ஆம் தேதி பன்றி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து சிதம்பரத்தில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில், நகராட்சி சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து  வரவழைக்கப்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

வடக்கு மெயின் ரோடு அருகே பன்றிகளை பிடித்தபோது அவற்றை வளர்ப்பவர்கள், பிடிப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments