முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடும் பொருளாதார சூழலில் சிரமத்திற்கு ஆளாகி உள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உதவிப்பொருட்களை அனுப்பப்படும் என அறிவித்தது நல்லெண்ணத்தை குறிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மகிந்த ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments