கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரும் - அமித் ஷா

0 5923
கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் சிலிக்குரியில் பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வராது என்கிற வதந்தியைத் திரிணாமூல் காங்கிரஸ் பரப்புவதாகத் தெரிவித்தார்.

வங்கதேசத்தினர் இந்தியாவில் ஊடுருவுவதை மம்தா பானர்ஜி விரும்புவதாகக் குற்றஞ்சாட்டிய அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மம்தா ஆட்சியில் ஊழலும் கொலைகளும் பெருகி விட்டதாகக் கூறிய அமித் ஷா, பல மாநிலங்களுக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பும் மம்தா, பீர்பூமிக்கு ஏன் அனுப்பவில்லை என வினவினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments