சத்தீஸ்கரில் காற்று நிரப்பிய போது ஜேசிபி வாகனத்தின் டயர் வெடித்து சிதறியதில், தொழிலாளர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டு பலி.!

0 2144

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாகனப் பணிமனையில் காற்று நிரப்பிய போது ஜேசிபி வாகனத்தின் டயர் வெடித்து சிதறியதில், தொழிலாளர்கள் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள சில்தாரா தொழிற்சாலை வாகன பணிமனையில், ஜேசிபி வாகனத்தின் டயருக்கு இருவர் காற்று நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக டயர் வெடித்ததில் தொழிலாளர்கள் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments