விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், திடீரென சவப்பெட்டியை தட்டியதால் பரபரப்பு..

0 2747
பெரு நாட்டில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியை தட்டிய நிகழ்வு நடந்துள்ளது.

பெரு நாட்டில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியை தட்டிய நிகழ்வு நடந்துள்ளது.

லம்பேக் (Lambayque) நகரை சேர்ந்த ரோசா இசபெல் (Rosa Isabel) என்ற பெண் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இசபெல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதையடுத்து,இறுதிச்சடங்கிற்காக இசபெல்லின் உடலை சவப்பெட்டியில் வைத்து அவரது உறவினர்கள் இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென ரோசா இசபெல் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, அவரது சுற்றியிருந்தவர்களை நோக்கி வெறித்துப் பார்த்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடனடியாக அவரை ஆக்ஸிஜன் உபகரணம் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறிதளவு நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து இசபெல்லின் நிலைமை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments