ஹரியானாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஹரியானா மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஹரியானா மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அம்மாநிலத்தின் பஸ்தாரா என்ற இடத்தில் சுங்கச்சாவடிக்கு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தியதில், வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, காரில் இருந்தவர்களை கைது செய்த போலீசார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைதான நான்குபேரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் வெடிபொருட்களை விநியோகம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments