வெளிநாட்டுக்கு கடத்த இருந்த சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 3 பழங்கால தெய்வ சிலைகள் மீட்பு!

மாமல்லபுரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த உலோகத்தினால் ஆன 3 பழங்கால தெய்வ சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அங்குள்ள ஒரு கலைபொருட்கள் விற்பனைக்கூடம் மூலம் பழங்கால சிலைகள் கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து The Boutique என்ற அந்த விற்பனை கூடத்தில் சோதனை மேற்கொண்ட அவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த 2 பார்வதி அம்மன் சிலைகள் மற்றும் ஒரு நடனமாடும் சிவன் சிலையை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் சந்தை மதிப்பு சுமார் இரண்டரை கோடி ரூபாய் என தெரிவித்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
Comments