சேலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டும் - பாமக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை!

0 706

சேலம் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அவர், ஜியோ, ஏர்டெல் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்கள் ஆங்காங்கே கம்பங்களை அமைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், அதனை அகற்றி சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் நிலை உள்ளதாகவும், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments