இரு கைகள் இல்லையென பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட மாணவி.. தன்னம்பிக்கையை இழக்காமல் பொதுத்தேர்வை எழுதி அசத்தல்.!

0 2382

இரு கைகள் இல்லையென பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட மாணவி தன்னம்பிக்கையை இழக்காமல் தொடந்து படித்து ஆசிரியரின் உதவியுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளார்.

லட்சுமி என்ற அந்த மாணவிக்கு, பிறந்தபோது இரு கைகளும் இல்லாமல் இருந்ததால், திருவாரூரைச் சேர்ந்த அவரது பெற்றோர் மயிலாடுதுறையில் உள்ள காப்பகம் ஒன்றில் அவரது 2ஆவது வயதில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

கைகள் இல்லாத நிலையிலும் மனம் தளராமல் கல்வியைத் தொடந்த அந்த மாணவி, மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பொதுத்தேர்வை எழுதினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments