கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்காத தனியார் பள்ளி....பெற்றோர்கள் போராட்டம்!

0 1773

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

செயின்ட் ஆனிஸ் ஜெ.சி மெட்ரிகுலேஷன் எனும் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், முழு கல்விக் கட்டணம் செலுத்தாததால், இறுதியாண்டு தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுகுறித்து பள்ளி தரப்பில் விளக்கம் கேட்ட போது, பலமுறை எச்சரித்தும் மாணவர்களின் பெற்றோர் கல்விக்கட்டணம் செலுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் போராட்டம் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments