2023 முதல் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் தொடங்கப் பரிசீலனை - மத்திய அமைச்சர்!

0 876

ஹஜ் பயணம் புறப்படும் இடங்களில் ஒன்றாகச் சென்னையை இடம்பெறச் செய்யும் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர், கொரோனா சூழலைக் கருத்திற்கொண்டு இந்த ஆண்டு ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் ஹஜ் பயணம் புறப்படும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் புறப்படும் இடங்களில் ஒன்றாகச் சென்னையையும் இடம்பெறச் செய்வது பற்றிப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்காலத்தில் எத்தகைய சூழலிலும் ஹஜ் பயணம் புறப்படும் இடமாகச் சென்னை இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments