சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து கஞ்சா புகைத்ததை உரிமையாளர் தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் ஆட்டோவை தீயிட்டு கொளுத்திய மூவர் கைது.!

0 1316

சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து கஞ்சா புகைத்ததை உரிமையாளர் தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் அந்த ஆட்டோவை தீயிட்டு கொளுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

திருவல்லிக்கேணி நீலம் பாட்ஷா தர்கா தெருவில் அப்பாஸ் என்பருக்கு சொந்தமான ஆட்டோவில் அமர்ந்து நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த ஆரிப், அப்துல் உசேன் , கவுஸ் பாஷா ஆகியோர் கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. ஆட்டோ அப்பாஸின் வீட்டருகே நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், இதனை பார்த்த அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்ற மூவரும் மீண்டும் அதிகாலை நேரத்தில் பெட்ரோல் எடுத்து வந்து ஆட்டோ மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments