கொடைக்கானலில் இறந்து கிடந்த சிறுத்தையை கடித்துக் குதறிய காட்டுப்பன்றிகள்.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை ஒன்றை காட்டுப்பன்றிகள் சில கடித்துக் குதறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காலையில் அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள், இறந்து கிடந்த சிறுத்தையை காட்டுபன்றிகள் கடித்து குதறுவதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை மீட்டனர். எந்த வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
Comments