அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்று.!

0 721

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் வலுவான புயல் காற்றுகள் சூறாவளியாக மாறி சுழன்றடித்தன.

செமினோல் என்ற இடத்தில் வீசிய சூறாவளிக்காற்று பரவலாக சேதங்களை ஏற்படுத்தியது.

ஓக்லஹாமா நகரில் இருந்து 50 மைல்கள் தூரத்தில் உள்ள செமினோலின் மையப்பகுதியில் வான் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில கட்டிடங்கள் தரைமட்டமாகி இருந்த காட்சிகளும், வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

மாகாணம் முழுவதும் சூறாவளிக்காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதுடன், மின்வெட்டு காரணமாக சுமார் 14 ஆயிரம் பேர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments