மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனம் சுமார் 1,500 கோடி நிதி.!

0 668

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடும் 2 ஆயிரம் கோடியாக உயர்ந்ததை அடுத்து, ஜப்பான் நிறுவனத்திடம் மத்திய அரசு நிதியுதவி கோரியிருந்தது.

இந்த நிலையில், ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ஆயிரத்து 500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது எனவும், மீதமுள்ள நிதியை அக்டோபர் 26-ந்தேதிக்குள் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments